நில உரிமையாளர் ஒருவரை திமுக எம்எல்ஏ கள்ளத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் இதயவர்மன். இவருக்கும், சீனிவாசன் என்பவரும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவருக்கும் இடையே நிலப்பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதல் உருவானதாக தெரிகிறது.

அப்போது, நில உரிமையாளராக சீனிவாசனை திமுக எம்எல்ஏ இதயவர்மன் தன்னிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியின் மூலம் சுட்டுள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த இந்த மோதலில், சீனுவாசன் உயிர் தப்பியுள்ளதாகவும், காரில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இடுப்பில் குண்டுகள் துளைத்த சீனிவாசன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனிடையே, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், திமுக எம்எல்ஏ இதயவர்மனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்து வருகின்றனர்.