ஜெயலலிதாவை A1 ஆகவும்.. சசிகலாவை A2வாக கம்பி எண்ண வைத்தது இந்த சட்டத்துறைதான்.. அமைச்சர் உதயநிதி புகழாரம்.!
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் ஒன்றியமும் மாநிலமும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
அண்ணாவுக்கு அருகில் உறங்க வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசையை கடுமையாக பாடுபட்டு, நிறைவேற்றி காட்டியது இந்த சட்ட துறை தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் ஒன்றியமும் மாநிலமும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அப்போது, பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்;- திமுகவில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்றால் அது சட்டத்துறை தான். திமுகவின் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவை A1 ஆகவும், அவரது நெருங்கிய தோழி சசிகலாவை A2 வாக கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறைதான்.
இதையும் படிங்க;- சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்.. அசராமல் திமுகவுக்கு சவால்விட்டு திருப்பி அடிக்கும் அண்ணாமலை..!
இரண்டு மாதங்களுக்கு முன் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றார். தமிழ்நாடு என இருக்க வேண்டாம். தமிழகம் என மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். தற்போது திமுக ஆட்சியில் இல்லாமல் இபிஎஸ் ஆட்சியோ அல்லது ஓபிஎஸ் ஆட்சியோ இருந்திருந்தால் தற்போது தமிழ்நாட்டின் பெயரையே மாற்றி இருப்பார்கள். அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.
இதையும் படிங்க;- அடுத்தவர் காலில் விழுந்து பதவி பெற்றுவிட்டு காலை வாரும் கலையை கற்றவர்கள்! இபிஎஸ்-ஐ நேரடியாக அட்டாக் செய்த BJP
அண்ணாவுக்கு அருகில் உறங்க வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசையை கடுமையாக பாடுபட்டு, நிறைவேற்றி காட்டியது இந்த சட்ட துறை தான். ஜெயலலிதா இருந்த வரையில் அதிமுகவின் நிலைமை வேறு. தற்போது அது வேறு மாதிரி இருக்கிறது என்றும் விமர்சித்தார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவும், விளையாட்டுத்துறை சார்பாக 5 முக்கியமான கோரிக்கைகளை வைக்கவுமே பிரதமர் மோடியை நேரில் சந்தித்தேன். ஆனால், அதிமுகவினரோ தங்களது கட்சி பிரச்சனைகளை தீர்க்கவே பிரதமரை சந்திக்கின்றனர் என்றார்.