தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது கட்சித்தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் (68) நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட  உடல்நலக்குறைவு
காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திற்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், விஜயகாந்திற்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தற்போதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.