It is reported that tomorrow the DMK leader Karunanidhis volunteers are to meet with Tamil Diaspora.

நாளை வரும் தைப்பொங்கல், தமிழர் திருநாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொண்டர்களுக்கு மிகச்சிறந்த பொங்கல் பரிசு இதுவாகத்தான் இருக்க முடியும் என கூறுகின்றனர் திமுகவினர். 

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான தைத்திங்களில் தொண்டர்களை சந்தித்து கருணாநிதி 10 ரூபாய் வழங்குவது வழக்கம். 

ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் காவேரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் தொண்டர்களை சந்திக்க முடியாத நிலை இருந்து வந்தது.

அதன்பின்னரும் நீண்ட நாட்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டி இருந்ததால் தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். 

இதனிடையே உடல் நலம் தேறி வர தொண்டர்களை சந்திக்க ஆரம்பித்தார் கருணாநிதி. பிரதமர் மோடி கருணாநிதியை பார்த்து உடல்நலம் விசாரிக்க வந்தபோது வாசல் வரை வந்து தொண்டர்களை நோக்கி கையசைத்து சிரித்து குதூகலப்படுத்தினார். 

இந்நிலையில் நாளை தைப்பொங்கல் விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்படவுள்ளது. அதனால் கருணாநிதி நாளை தொண்டர்களை சந்திக்கிறார். காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களைச் சந்திக்கும் அவர், அவர்களுக்கு புதிய 50 ரூபாய் நோட்டு வழங்க உள்ளார்.

இதனால் அவரது கோபாலபுரம் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க, தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.