திமுக தலைவர் கருணாநிதி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கோபாலபுரம் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார். சிறிய அளவில் உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று ட்ரக்கியாஸ்டமி என்ற உணவுக்குழாய் மாற்றம் செய்ய காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 2 நாள்கள் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு உணவுக்குழாய் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு இன்று மீண்டும் மாற்றம் செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்காக அவர் 4-வது முறையாக மருத்துவமனை செல்வது குறிப்பிடத்தக்கது.