கறுப்பர் கூட்டத்திற்காக களமிறங்கி உள்ள வழக்கறிஞர் ராஜ் திலக் திமுக பின்னணியைக் கொண்டவர் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. 

கந்த சஷ்டி கவசம் குறித்து அறுவருப்பாகவும், ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் திமுகவின் ஐடி விங் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் எடுத்துக் கொண்ட ஆதார புகைப்படங்கள் வெளியாகியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் தங்களை நியாயப்படுத்தியும், தங்களது கட்சிக்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் தொடர்பில்லை என்றும்வெளிப்படையாக அறிக்கை கொடுத்து இருந்தனர். இந்நிலையில், இன்று போலீசாஸிரிடம் செந்தில் வாசன் கொடுத்த வாக்குமூலத்தில் அவர் திமுக ஐடி விங் ஊழியராக பணியாற்றியவர் என்பது தெரிய வந்தது. 

ராஜ்திலக்கில் அப்பா ராஜா இளங்கோ 2009ல் கருணாந்தியிடம் ஆசி பெற்றபோது

இந்நிலையில் கறுப்பர் கூட்டத்தின் செந்தில்வாசனுக்காக ஆஜரான வழக்கறிஞர் திமுக பின்னணியை கொண்டவர் என்பது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கறுப்பர் கூட்டத்தின் வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் வழக்கறிஞர் ராஜ் திலக்கில் பின்னணியை ஆராய்ந்தால் அவர்  திமுகவின் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட என்.ஆர்.இளங்கோவின் ஜூனியர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ராஜ் திலக்கின் தந்தை ராஜ் இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற  நீதிபதி. ராஜ் இளங்கோ நீதிபதியாக இருந்த காலத்தில் திமுகவிற்கு சாதமாக வழக்கு முடிவுகள் வழங்கிய காரணத்திற்காக அவர் ஆந்திர பிரதேசத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

திமுக எப்பொழுதும் தங்களுடைய குற்றங்கலிருந்து தப்பிப்பதற்காக அவர்களை சார்ந்து இருக்கும் வழக்கறிஞர்களையும், நீதிபதிகளை மட்டும் தான் சம்மந்தப்பட்ட வழக்கை விசாரிப்பதற்காக ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆக மொத்தத்தில் கறுப்பர் கூட்டத்திற்கும் கறுப்பு சிவப்பு கூட்டமான திமுகவுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.