Asianet News TamilAsianet News Tamil

காவலர்களுக்கு லஞ்சம்,தோல்வியில் முடிந்த திருச்சி கே.என் நேருவின் சீக்ரெட் ஆப்ரேஷன், தள்ளி போகுமா தேர்தல்?

திருச்சியில் காவலர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க பதவி வாரியாக காவலர்களுக்கு கவரில்  தி.மு.கவின் முதன்மை செயலாளர் நேரு ரகசியமாக பணம் பட்டுவாடா செய்தது அம்பலமாகியுள்ளது. மாநகர காவல் ஆணையர் மேற்கொண்ட விசாரணையில் லஞ்சமாக பணம் விநியோகிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.       

 

dmk kn nehru secret operation ends in failure
Author
Trichy, First Published Mar 28, 2021, 4:01 PM IST

திருச்சியில் காவலர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க பதவி வாரியாக காவலர்களுக்கு கவரில்  தி.மு.கவின் முதன்மை செயலாளர் நேரு ரகசியமாக பணம் பட்டுவாடா செய்தது அம்பலமாகியுள்ளது. மாநகர காவல் ஆணையர் மேற்கொண்ட விசாரணையில் லஞ்சமாக பணம் விநியோகிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.       

திருச்சியில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்களுக்கு பணம் வழங்கியதாக தி.மு.கவின் முதன்மை செயலாளர்  நேரு மீது சுமதப்பட்ட குற்றசாட்டு உண்மை என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் செய்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே தன் மீது பொய் பிரச்சாரம் நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திடம் நேரு புகார் அளித்துள்ளதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். 

தி.மு.கவின் முதன்மை செயலாளரும் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு திருச்சியில் காவலர்களின் நடமாட்டத்தை தெரிந்து கொள்ள காவல்நிலையங்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதனின் விசாரணையை அடுத்து “காவலர்களை விலைக்கு வாங்கும்” நேருவின் சீக்ரெட் ஆப்ரேஷன் வெளிச்சத்திற்கு வந்தது.

dmk kn nehru secret operation ends in failure

திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள காவல் நிலையங்களில் திருச்சி மாநார ஆணையர் நேரடியாக விசாரணை நடத்தினார். இதில் தில்லை நகர் காவல் நிலையத்தில் மட்டும் 12 கவர்களில் 24 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், திருச்சி ஜி.எச் காவல் நிலையத்தில், 20 கவர்களில் 40 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லஞ்சம் பணத்தை பங்கிட்டு கொள்வதில் காவலர்களுக்கு இடையே பஞ்சாயத்து வந்துவிடக் கூடாது என்பதால் காவலர்களின் பதவிக்கு ஏற்றவாறு கவரில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எடமலைப்பட்டி காவல்நிலையத்திலும் பணத்துடன் கூடிய கவர்கள் கண்டெடுக்கப்பட்டது. 

சீக்ரெட் ஆப்ரேஷன் தோல்வியில் முடிந்ததை அடுத்து, நேரு இந்த சம்பவத்திற்கும் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனை, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். 

dmk kn nehru secret operation ends in failure

காவலர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்படும். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் திருச்சி மேற்கு தொகுதியின் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து முடிவு எடுக்கும் மேலும் நேரு மீதும் நடவடிக்கை எடுக்க பரிதுரைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios