விழுப்புரம் மாவட்டத்தில் சிவி சண்முகத்தின் அரசு பலம், பண பலம், படை பலம் சமூக வாக்கு வங்கியை வளைக்கும் பல மடங்கு பவர் கொண்ட ஜெகத்ரட்சகனை, பொன்முடிக்கு துணையாக அனுப்பியுள்ளது திமுக.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது, நாங்குநேரியை காங்கிரஸ் தலையில் கட்டிவிட்ட திமுக விக்கிரவாண்டி தொகுதியில் பொன்முடியின் நண்பர் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தியை களமிறங்கியுள்ளது.  

இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக தேர்தல் பணிக்குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முரசொலியில் நேற்று வெளியான அறிவிப்பில், தேர்தல் பணி பொறுப்புக் குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் பொன்முடியும், செயலாளராக அரக்கோணம் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகனும், குழு உறுப்பினர்களாக செஞ்சி மஸ்தான், அங்கையற்கண்ணி, டி.எம்.செல்வகணபதி, ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்திற்கு பொறுப்பாளராக  கே.என்.நேருவும், காணை வடக்கு ஒன்றியத்துக்கு எ.வ.வேலுவும், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், காணை தெற்கு ஒன்றியத்துக்கு தா.மோ.அன்பரசனும், கோலியனூர் மேற்கு ஒன்றியம் மற்றும் விக்கிரவாண்டி பேரூருக்கு  ஆ.ராசாவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

ஏற்கனவே, இடைத் தேர்தலில் ஜெகத்ரட்சகன் மகன் சுந்தீப் ஆனந்தை போட்டியிட தலைமை கேட்டபோது, வேண்டாம் என்று மறுத்துள்ளார் ஜெகத்ரட்சகன். காரணம் பொன்முடி தன்னை மாவட்டத்தில் வளரவிடமாட்டார் என்பது நன்றாகவே தெரியும், அதேபோல பொன்முடியும் விடாமல் தனது நண்பர்களை சுத்துவட்டாரத்தில் உலா தொகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பதால், ஜகத் போட்டி போட விரும்பவில்லை, இந்த நிலையில்தான் தற்போது அவரை தேர்தல் பணிக்குழுவின் செயலாளராக நியமித்துள்ளது திமுக தலைமை. 

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விக்கிரவாண்டி தொகுதியில் தனித்து நின்ற பாமக சுமார் 40,000 வாக்குகளை பெற்றது. திமுக வேட்பாளர் ராதாமணி வாங்கியது 63757வாக்குகள், அதிமுக வேட்பாளர் ஆர்.வேலு    56845, தற்போது  40000 வாக்கு அள்ளிய பாமக அதிமுக கூட்டணியில் உள்ளதால் அதனை சமாளிக்கவே ஜெகத்ரட்சகனுக்கு செயலாளர் பதவியை கொடுத்து விக்கிரவாண்டிக்கு அனுப்பியுள்ளது, தேர்தல் முடியும்வரைவன்னிய சங்க முக்கிய தலைவர்களை வீட்டிற்க்கே சென்று திமுகவிற்காக பிரசாரம் பெற்றுக்கொள்வார் என தெரிகிறது. 

விழுப்புரம் மாவட்டத்தில் சிவி சண்முகத்தின் அரசு பலம், பண பலம், படை பலம் சமூக வாக்கு வங்கியை வளைக்கும் சமமான பவர் கொண்டவர் ஜெகத்ரட்சகன்,பொன்முடியை 2011 ஆண்டு விழுப்புரத்தில் தோற்கடித்ததும், 2016 ல் திருக்கோவிலூருக்கு அனுப்பி விட்டு பொன்முடியின் கோட்டையில் மாஸ் காட்டிய சிவிக்கு சரியான ஆள் ஜகத் தான், அதனாலே ஐவர் அணியில் மெயின் புள்ளி மன்னிக்கணும் வேட்டைப்புலி புலி ஜகத் ரட்சகனை களம் இறக்கியுள்ளனர்.