திமுக ஒரு கம்பெனி போல செயல்பட்டு வருகிறது... எடப்பாடி பழனிசாமி விளாசல்!!

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவில் திமுக மட்டும் தான் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

dmk is acting like a company says edappadi palanisamy

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவில் திமுக மட்டும் தான் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், அம்மா மறைவுக்கு பிறகு எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி இரு பெரும் தலைவர்கள் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த நிலையில், எளிய தொண்டனாக இருந்த நான் பதவி ஏற்றுள்ளேன். திமுகவில் அப்படி வர முடியாது. வாரிசுகள் மட்டுமே தலைவர் பதவிக்கு வந்துள்ளனர். ஜனநாயக ரீதியாக உள்ள கட்சி இந்தியாவில் அதிமுக மட்டுமே.

இதையும் படிங்க: அயோத்திக்கு வாங்க.. உங்களை நாங்க பார்த்துக்குறோம் - ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்த சாமியார்

வேறு எந்த கட்சியிலும் எளிய தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியாது. கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தது அதிமுக. அவிநாசி சாலையில் 10 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை மேம்பாலம், கோவை – பொள்ளாச்சி 40 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை கொண்டு வந்தது அதிமுக. திமுக எந்த புதிய திட்டத்தையும் கோவைக்கு அறிவிக்கவில்லை. தமிழகத்திலேயே 10 தொகுதியில் வெற்றி பெற்று வரலாறு படைத்த மாவட்டம் கோவை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டும். திமுக ஒரு கம்பெனி போல் செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நான் நம்பர் 1 முதல்வர் தான்.. இது போதாது.. தமிழ்நாடு நம்பர் 1 ஆகணும் - முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி.!

திமுகவில் ஆட்சியிலும், கட்சியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொற்கால ஆட்சியை கொடுத்தது. இரண்டே ஆண்டில் மக்கள் வெறுப்பை சந்திக்கிற அரசாக திமுக உள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவில் திமுக மட்டும் தான். அதிமுக மக்களுக்கு சேவை செய்கிற இயக்கம். முதல்வர் ஸ்டாலின் செய்கிற ஒரே வேலை அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடுவது மட்டுமே. அதிமுக கொண்டு வந்த நிறைய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios