அயோத்திக்கு வாங்க.. உங்களை நாங்க பார்த்துக்குறோம் - ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்த சாமியார்
அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளநிலையில் ராகுல் காந்தி வசிப்பதற்கு அயோத்தி கோவிலில் இடம் தயார் என்று சாமியார்கள் கூறியுள்ளனர்.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சூரத் நீதிமன்றத்தில் மே 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அண்மையில் அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. தண்டனையைத் தொடர்ந்து உடனடியாக எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி வசித்து வந்த அரசு வீட்டையும் காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
ராகுல் காந்தி 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த வீடு காலி செய்ய சொல்வதற்கு காரணம், அவருடைய பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தான். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பல தலைவர்கள் ராகுல் காந்திக்கு தங்களுடைய வீட்டை தர முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில் அயோத்தியில் உள்ள சாமியார்கள் ராகுல் காந்தி அயோத்திக்கு வந்தால் அவருக்கு வீடு தயார் என்று கூறியுள்ளனர். அயோத்தியை சேர்ந்த சாமியார்களாக நாங்கள் இந்த புனித நகருக்கு ராகுல் காந்தியை அழைக்கிறோம் என்றும் அவர் தங்குவதற்கு எங்களால் இடத்தை வழங்க முடியும் என்று கூறியுள்ளனர்.
மேலும், அயோத்தியில் உள்ள அனுமார் கோயிலில் ராகுல் காந்தி வழிபட வேண்டும். இங்கு அவர் தங்க வேண்டும் என்று நாங்கள் விருப்பப்படுகிறோம். ராகுல் காந்தி அயோத்திக்கு நிச்சயம் அயோத்திக்கு வேண்டும். அவர் வந்தால் வரவேற்போம் என்று சாமியார்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க..ஒரிஜினல் ட்விட்டர் லோகோ எவ்வளவு விலைக்கு வாங்குனாங்க தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
இதையும் படிங்க..அதிகரிக்கும் மாரடைப்பு.. மாரடைப்பிற்கும், கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கா.? மத்திய அரசு பகீர் தகவல்