திமுக ஒரு ரவுடி கட்சியாக செயல்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்தின் தலைமை அலுவலகத்தில் சில்லறை விற்பனை மையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். மேலும், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக இணைக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட மையத்தை திறந்து வைத்தார். 

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் உரங்கள் பிளாடிக் பைகளில் வழங்கப்படாமல் அரசு நிர்ணயம் செய்த அளவீட்டின்படி தயாரிக்கப்பட்ட மாற்று பொருட்களை வைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என தெரிவித்தார்.

 

கோடநாடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் வைத்துள்ள குற்றச்சாட்டு தமிழக முதல்வர் விளக்கமளித்துள்ளார். ஆனாலும் ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். கொலை, கொள்ளை போன்ற குற்றம் சம்பவங்களில் ஒருபோதும் அதிமுக ஈடுபடாது. திமுக தான் ஈடுபடும். மேலும் திமுக ரவுடி கட்சி என்றும் விமர்சனம் செய்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை போக்க முடியாது என்று தெரிவித்தார்.