காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுதுவம் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதேபோல் மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, நேற்று திமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் திமுக இன்று 4-வது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 

சென்னை, தாம்பரம் பேருந்து நிலையம் அருகே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆதம்பாக்கத்தில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.  கோயம்பேட்டில் திமுகவினர் மெட்ரோ ரயிலை திமுக உள்ளிட்ட கட்சியினர் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் ரயில் மறியல் போராட்டத்தில் கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நீதிமன்றம் முன்பும், நாமக்கல் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் புறப்பட்ட பயணிகள் ரயிலை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மறித்து போராட்டம் நடத்தி வருகின்றர். ரயில் எஞ்சினின் மீது ஏறி நின்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களை போலீசார் சமாதானம் செய்து கீழே இறங்கச் செய்தனர்.