சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் இந்துக்களை இழிவுபடுத்தியதால் அவரது கடையில் இந்து உணர்வாளர்கள் பொருட்களை வாங்க வேண்டாம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் காரப்பன் சில்க்ஸுக்கு சென்று வியாபாரத்தை பெருக்கியதாக கூறப்பட்டது. ஆயிரக்கணக்கில் நடந்த வியாபாரம் லட்சக்கணக்கில் விற்பனையாவதாக அதன் உரிமையாளர் தெரிவித்து இருந்தார். காரப்பண் சில்ஸ் தமிழகம் முழுவதும் பிரபலமானது. இதன் பின்னணியில் திமுகவினர் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவியது. 

பாஜக கூட்டணியான அதிமுக இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதற்கு கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ’இடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி’’எனத் தெரிவித்ததோடு  தமிழக இடைத்தேர்தலில் பகவத்கீதையையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் இழித்தும் பழித்தும் பேசிய திக, திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி’’எனக் கருத்து தெரிவித்து இருந்தார். 

 

அதற்கு கருத்து தெரிவித்துள்ள பலரும், . தமிழக பாஜக இந்த வெற்றியை திரு மரிதாஸ்க்கு சமர்ப்பிக்க வேண்டும். அவருக்கு ஆதரவும் பிரச்சாரத்தில் முக்கிய பொறுப்பும் கொடுக்கவேண்டும். 2021 வெற்றி நமதே. திருட்டு திராவிடத்தை முடிவுக்கு கொண்டுவரும் நாளே, தமிழகத்தின் தீப ஒளி
 இந்து பற்றாளர்களும், இந்து சிந்தனையாளர்களும், இந்துக்களை ஆதரிப்பவர்களும், இந்துகளும் ஒற்றுமையுடன் தேர்தலில் இன்னும் பலசாதனைகளை செய்ய வேண்டுகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

 

திமுக தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள மற்றொருவர், காரப்பனை காப்பாற்றும் முனைப்பில் இடைத்தேர்தலை கோட்டை விட்ட உபி கள்’’எனப் பதிவிட்டுள்ளார்.