சென்னையில் நடைபெற்ற திமுக வின் உயர்மட்டக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி பங்கேற்றுள்ளார்.

கடந்த 16ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று இரவே தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் வில்சன், உள்ளிட்ட உயர் மட்ட நிர்வாகிகளை மற்றும் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். 

சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது வரை கட்சிகள் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நிகராக 40 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். தூக்கத்தில் ஒரு நடிகர் என்கிற முறையில் அவரை பார்க்க தொண்டர்கள் கூடிய நிலையில் பிறகு அவரது பேச்சு ஸ்டைல் அனைவரையும் கவரும் வகையில் இருந்ததால் செல்லும் இடமெல்லாம் அவர் பேச்சைக் கேட்பதற்கு என்று ஒரு கூட்டம் கூடியது. 

அதிலும் மோடியை வில்லன் என்றும் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்சை  கைக்கூலிகள் என்றும் தனது தந்தை ஸ்டாலினை ஹீரோ என்றும் குறிப்பிட்டு உதயநிதி செய்த பிரச்சாரம் திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. இப்படி தனது பிரச்சாரத்தை முடித்த கையோடு அண்ணா அறிவாலயத்தில் அதாவது திமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். 

இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கியத்துவம் ஆரம்பித்துவிட்டதாக கட்சியினர் கூறுகின்றனர். தேர்தல் முடிவு வெளியான பிறகு உதயநிதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப் படுவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். உதயநிதியும் அதனை எதிர்பார்த்துதான் 40 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.