திமுக கிராம சபை கூட்டத்தால் 9 ஆண்டுகளாக எரியாத தெரு விளக்கு எரிந்தது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், ‘’மு.க.ஸ்டாலின் கிராம சபை நடத்துகிறாரே அதனால் என்ன பயன், அவர் என்ன பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா? என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதல்வர். ஆம் நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன் தான். இதோ ஓர் ஆதாரம். கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெரு விளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் சொன்னார். இன்று அரசு சார்பில் தெரு விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள். யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும் முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்களே’’ எனத் தெரிவித்துள்ளார்