Asianet News TamilAsianet News Tamil

ஆசிரியர்களின் பணிகளைக் அங்கீகரிக்கத் தயங்கியது இல்லை… திமுக அரசு குறித்து உதயநிதி புகழாரம்!!

எந்தவித முறைகேடு இல்லாமல் இன்றைக்கு சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

dmk govt did not hesitate to recognize the work of the teachers says udayanidhi
Author
First Published May 30, 2023, 12:00 AM IST

எந்தவித முறைகேடு இல்லாமல் இன்றைக்கு சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. வெற்றிபெறாத காலங்களில் கூட தபால் வாக்குகளில் எண்ணிக்கையில் நாம் தான் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளோம்.

இதையும் படிங்க: வைரமுத்து போன்றோர் மீது நடவடிக்கை தேவை… மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் வேண்டுகோள் வைத்த பிரபல பாடகி!!

காரணம் சொல்லவே வேண்டியதில்லை. ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் எப்போதும் வாக்களிப்பது தி.மு.கவுக்கு தான். ஆசிரியர்களின் நலனுக்காக நம்முடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆசிரியர்களின் பணிகளைக் கழக அரசு என்றைக்குமே அங்கீகரிக்கத் தயங்கியது இல்லை. சமீபத்தில் கூட ஆசிரியர்களின் நலனுக்காக 250 கோடி ரூபாய் மதிப்பில் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மீது கொலைவெறித் தாக்குதல்... சீமான் கண்டனம்!!

ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்துத் தொடரப்பட்ட வழக்குகளை எல்லாம் நீக்கியது தி.மு.க அரசுதான். ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்குக் கடந்த காலங்களில் முறைகேடாகப் பணம் வசூல் செய்யப்பட்ட நிலையை நம்முடைய அரசு மாற்றி உள்ளது. எந்தவித முறைகேடு இல்லாமல் இன்றைக்கு சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios