வைரமுத்து போன்றோர் மீது நடவடிக்கை தேவை… மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் வேண்டுகோள் வைத்த பிரபல பாடகி!!
பிரபல பாடகி சின்மயி வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியயோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரபல பாடகி சின்மயி வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியயோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும்போது, ஒவ்வொரு முறையும் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். இந்தியா முழுவதும் இதுபோல் பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் பக்கம் நிற்கிறீர்கள். இதுபோல், அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும்போது மாற்றம் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஆனாலும், பாலியல் சுரண்டல்கள், தொல்லைகள் குறைந்தபாடில்லை. போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் இருந்தும் அனைத்து துறையிலும் பாலியல் குற்றச்சாட்டு எழத்தான் செய்கிறது. குறிப்பாக திரைத்துறையில் இன்று பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உங்கள் நண்பர் மற்றும் ஆதரவாளர் கவிஞர் வைரமுத்துவின் மீது 17க்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்தும், உங்கள் அருகாமையில் அவர் மகிழ்ச்சியுடன்தான் இருக்கிறார். இதனால் அவர் குறித்து மேலும் பெண்கள் பேச முடியாதவாறு செய்கிறார். தமிழகத்தில் வேறு அரசியல்வாதிகளே இல்லை என்பதுபோல் அவரை தொடர்ந்து உங்கள் கட்சி முன்னிலைப்படுத்துகிறது. கிட்டத்தட்ட தமிழ் திரைத்துறையில் 5 ஆண்டுகள் வேலை செய்ய தடையுடன், நகரின் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்காக போராடிக்கொண்டிருக்கிறேன்.
இதையும் படிங்க: செங்கோலை வைத்து அரசியலா? இவர்களை தமிழ் அன்னையே மன்னிக்க மாட்டார் - தமிழிசை காட்டம்
அதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்பது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. இந்த நிலையில் இருந்தால் இன்னும் 20 ஆண்டுகள் கூட இந்த வழக்கு முடிய ஆகும் என்றாலும் எனக்கு அதை எதிர்கொள்ள பலம் உள்ளது. இந்த நாட்டில் அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத ஒருவருக்கு நியாயம் கிடைக்க இத்தனை நாட்கள் ஆகும்தான் போல. நான் தேசிய பெண்கள் கவுன்சிலில் 2018-19ம் ஆண்டுகளிலே புகார் அளித்துவிட்டேன். ஏனெனில் எங்களை போன்றவர்களுக்கு அது மட்டும்தான் ஒரே வழி. எழுத்துப்பூர்வமான புகாரை போலீஸ் அதிகாரிகளுக்கு அளித்தேன். அது வீட்டிற்கு புலனாய்வுக்கு வந்தது. என்னிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன. சமாதானத்திற்காக அவர்கள் அழைத்தது, அவர்களின் போன் கால்கள் என போதிய ஆதாரங்களை வைத்துள்ளேன். அவரது மகன் மதன் கார்க்கிக்கும் குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர் பதிலும் அளித்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது தந்தையின் நடத்தை சில ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பிர்ஜ் பூஷணுக்கும், வைரமுத்துவுக்கு விதிகள் வேறு வேறு கிடையாது. நமது நாட்டின் சாம்பியன்கள், மல்யுத்த வீரர்கள். நாட்டின் பெருமை. மைனர் உள்பட பிரிஜ் பூஷணின் யெபரை கூறியுள்ளார்கள். 17க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்துவின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மீது கொலைவெறித் தாக்குதல்... சீமான் கண்டனம்!!
உங்களுக்கும், உங்கள் கட்சிக்கு மிக நெருக்கமாக உள்ளவர். என்னையும் மற்றவர்களையும் அடக்க முயல்கிறார். பெண்களின் திறமைகள் மற்றும் கனவுகளை இதற்காக காவு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. எங்கள் அனைவரின் திறமையைவிட அவரது திறமை பெரிதொன்றும் இல்லை. இது உங்கள் கண் எதிரே நடக்கிறது. எனவே தேவையானதை செய்யுங்கள். அப்போதுதான், தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். எனது துறையில் இதுபோன்றவர்கள் இனி வரக்கூடாது என்பதற்காக நான் பேசுகிறேன். ஆனால், அவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் அவரது அரசியல் தொடர்புகளுக்காக வெளியே பேச பயப்படுகிறார்கள். எனது திரைத்துறையில் போக்சோ, ஐசிசி உள்ளிட்ட அமைப்புகள் சரியாக செயல்பட தயவுசெய்து ஆவண செய்யுங்கள். எனது ஊடகத்தில் பெண் குழந்தைகள் எல்லாம் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்) எங்கள் துறையில் அனைத்து இடங்களிலும் பாலியல் அத்தீமீறல்களை தடுக்க வழிவகை செய்யுங்கள். தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையில் பெண்கள் மற்றும் ஆண்கள் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். குழந்தைகள் நிகழ்ச்சியை டிவியில் தொகுத்து வழங்கியபோது ரமேஷ் பிரபா குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது பெயரும் வெளியானது. எனவே அனைத்துக்கும் ஆவண செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.