திமுகவின் அடுத்த தலைவர் யார் ? அடுத்தடுத்து காத்திருக்கும் சம்பவங்கள் !!

அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

DMK General Assembly is going to be held on October 9

அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 19 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. 2வது நாளான 23ம் தேதி 21 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

இதையும் படிங்க: நான் வேற கட்சியில் இணைய போகிறேன், அதிமுக கிடையவே கிடையாது - சுப்புலட்சுமி ஜெகதீசன் சொன்ன சீக்ரெட்!

3வது நாளான நேற்று புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு (மயிலாடுதுறை), நாகை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்தி ஆகிய 16 மாவட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. திமுக மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு இன்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் வெற்றி பெறும் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும்.

இதையும் படிங்க: இதுக்கு அவங்கதான் காரணமா? பெட்ரோல் குண்டு வெடிப்பு பற்றி ரகசியம் சொல்லும் சீமான்.!

அதன்பிறகு திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும். இந்நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பொதுக்குழுவில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios