தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, சமீபத்தில், சென்னையில் இருந்து, திருச்சிக்கு விமானப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது விமானம் தரையிறங்க, ஒரு சில நிமிடங்களுக்கு முன், 'சிறுநீர்’ கழிப்பதற்காக  கழிப்பறைக்கு போயிருக்கிறார். 

ஆனால், அவரால் கழிப்பறை கதவை திறக்க முடியவில்லை. விமான பணிப் பெண்ணை கூப்பிட்டு, 'கதவை திறந்து விடும்மா' எனக் கேட்டிருக்கிறார். 'விமானம் தரையிறங்கும் போது, கழிப்பறையை பயன்படுத்த முடியாது... அதனால், கதவு தானாவே, 'லாக்' ஆகிடும்... நீங்க சீட்ல போய் உட்காருங்க' எனக் கூறியிருக்கிறார் அந்தப் பணிபெண். 

ஆனால், நேருக்கு அவசரம்... 'கதவை திறக்குறியா... நான் இங்கயே போகட்டுமா...'என வேட்டியை மடித்துக் கட்டியிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி, சீட்டில் உட்கார வைப்பதற்குள், விமான பணிப்பெண் படாதபாடுபட்டு விட்டாராம். இந்தத் தகவல் திருச்சி திமுக வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.