தாங்கள் இந்துக்களின் எதிரியல்ல என்பதை வெளிக்காட்ட திமுக உடன்பிறப்புகள் தங்களது காரில் வேல் மாட்டி அதில் கட்சிக்கொடியை பறக்க விட்டு வருகின்றனர்.

கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி ஆபாசமான வீடியோவை பகிரப்பட்டு இருந்தது. இது இந்துக்களை கொந்தளிக்கச் செய்தது. இது தொடர்பாக இந்து சங்கங்கள்- பாஜக சார்பில் வழக்கு தொடரபட்டது. இதனை தொடர்ந்து இந்த வீடியோவை பகிர்ந்த செந்தில் வாசன் திமுகவுடன் தொடர்புடையவர் என்பது ஆதாரங்களுடன் வெளியானது. ஆனால் இது தொடர்பாக திமுக சார்பில் தாமதமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடபும் இல்லை என திமுகவினர் மறுத்தனர். 

கறுப்பர் கூட்டத்தோதோடு தங்களை தொடர்பு படுத்தி பேசி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல்துறையிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் தாங்கள் இந்துக்களின் விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறோம். தங்களுக்கும், கறுப்பர் கூட்டத்திற்கும் சம்பந்தமில்லை என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக பேசினார். தங்கள் கட்சியில் உள்ள 1 கோடி பேர் இந்துக்கள் என அக்கட்சி விளக்கம் அளித்திருந்தது.

 

ஆனாலும் இந்து மதத்தினர் திமுகவை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் வேறு வழியில்லாமல் பகுத்தறிவு பேசி இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்து வந்த திமுகவினர் தற்போது தங்களது கார்களில் முருகப்பெருமானின் ஆயுதமான வேலை தங்களது கார்களில் மாட்டி அதில் திமுக கொடியை பறக்க விட்டு வருகின்றனர். இதன் மூலம் தாங்களும் இந்து மதத்தின் மீது பற்றுள்ளவர்களே என்பதை வெளிக்காட்டி வருகின்றனர்.  

கந்தசஷ்டி கவசத்தில் திமுக நிலைப்பாட்டில் இரண்டே நாட்களில் மாற்றிக் கொண்டு காரில் வேல் மாட்டி நாங்களும் ஹிந்து தான் என்பதை நிரூபிக்க திமுகவினர் போராடி வருகின்றனர்.  இதனை பார்த்து கருத்து தெரிவிப்பவர்கள் கந்தனின் கருணை திமுகவினரை மாற்றி விட்டது எனக் கூறி வருகின்றனர்.