Asianet News TamilAsianet News Tamil

இட ஒதுக்கீட்டு தீர்ப்பால் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்பு- உச்சநீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு

பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

DMK files review petition in Supreme Court against 10 percent reservation
Author
First Published Dec 5, 2022, 4:47 PM IST

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இந்த இட ஒதுக்கீடு தீர்ப்பால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாக திமுக மனுவில் குறிப்பிட்டுள்ளது. 10% இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கை மீண்டும் திறந்த நீதிமன்ற அறையில் விசாரணை செய்ய வேண்டும் ஏனென்றால் இந்த சட்டத்தினால் 133 கோடி இந்தியா குடிமக்களும் பாதிக்கப்படுகின்றனர்: ஓ பி சி,எஸ்சி, எஸ்டி பிரிவினரை புறந்தள்ளிவிட்டு கொடுக்கப்படும் இந்த இட ஒதுக்கீடு பாகுபாடானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என திமுக தனது சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுச்செயலாளராக அங்கீகரித்த டெல்லி..! உற்சாகத்தில் இபிஎஸ்..!என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்

10 சதவிகித இட ஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்குவது என்பது எஸ்சி, எஸ்டி , ஓ பி சி பிரிவினரை பாகுபடுத்தி பார்க்கும் செயல் என திமுக தனது சீராய்வு மனுவில் தெரிவித்துள்ளது. மேலும், முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது என்பது, சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோவிலுக்குள் ஜாதியை வைத்து நுழைய அனுமதிக்கப்படாமல் இருக்கும்போது ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்குவதை குற்றம்சாட்டவே முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. 

துரோகிகளை தூள் தூளாக்குவோம்.! நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்திடுவோம்- ஜெ. நினைவுநாளில் இபிஎஸ் சபதம்

அதேபோல, கௌரவம் என்ற பெயரில் ஆணவக் கொலைகள் அரங்கேற்றும் போது இட ஒதுக்கீடு என்பது தவறானதாக குற்றம்சாட்ட முடியாது,  ஜாதியை ஒழிக்க ஜாதியை எதிர்த்து போராட வேண்டுமே தவிர அதற்கு இடஒதுக்கீட்டை பலிகடா ஆக்கக்கூடாது.எனவே உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் 29வது பத்தியில் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கூற்று தவறானது எனவும் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஜி 20 ஆலோசனை கூட்டம்..! இபிஎஸ்கு அழைப்பு விடுத்தது ஏன்..? ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறிய பரபரப்பு தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios