திமுகவின் தேர்தல் அறிக்கை கடந்த சட்டமன்ற தேர்தலை போல் இந்த முறையும் ஜீரோவாகத்தான் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை அடையாறில் இன்று எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திமுக தேர்தல் அறிக்கை கடந்த சட்டப்பேரவை தேர்தலை போன்று வரும் தேர்தலிலும் ஜீரோவாகத்தான் இருக்கும். வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். சமூகத்தில் ஒற்றுமை நிலவ அரசு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.

மேலும், திமுக தலைவர், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அறிக்கை மட்டுமே விடுகின்றனர்.  ஊராட்சியில் தலித் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார்? என காட்டமாக முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். வேளாண் திருத்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்கின்றனர். பாஜகவில் மேலும் பல முக்கிய நிர்வாகிகள் இணைய உள்ளனர் என்று  கூறியுள்ளார்.