தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- வரும் 30-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். காணொலிக் காட்சி வாயிலாக மாலை 4.30 மணிக்குக் கூட்டம் நடைபெறும். அதுபோது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

இந்தக்கூட்டத்தில் கொரோனா பிரச்சனை, ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் தமிழகம் முன் உள்ள பிரச்சனை, சட்டப்பேரவை இடைத்தேர்தல், திமுகவுக்கு எதிராக எழுந்துள்ள பிரச்சாரங்களை எதிர்கொள்வது, தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.