திமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானது.. 7 பேர் அதிரடி மாற்றம்.. முழு பட்டியல் இதோ..!

திமுகவில் கோவை உட்பட 7 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அமமுக மற்றும் ரஜினி மன்றத்தில் இருந்து வந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

DMK district secretaries list released.. 7 people changed

திமுகவில் கோவை உட்பட 7 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அமமுக மற்றும் ரஜினி மன்றத்தில் இருந்து வந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள் பட்டியல்

* கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் செயலாளர் - மனோ தங்கராஜ் 

*  கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் - ரெ.மகேஷ் 

*  தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் - அனிதா ராதாகிருஷ்ணன், 

*  தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் - கீதாஜீவன்

*  தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் - சிவபத்மநாதன்

*  திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் - அப்துல் வஹாப்,

*  திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் - ஆவுடையப்பன்

* விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் - கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், 

*  விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் - தங்கம் தென்னரசு 

*  சிவகங்கை மாவட்ட செயலாளர் -  கே.ஆர். பெரியகருப்பன்

*  இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் -  காதர்பாட்சா முத்துராமலிங்கம்

*  தேனி தெற்கு மாவட்ட செயலாளர் -  ராமகிருஷ்ணன்

*  தேனி வடக்கு மாவட்ட செயலாளர் -  தங்க தமிழ்செல்வன்

*  திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் -  அர.சக்கரபாணி

*  திண்டுக்கல் கிழக்கு  மாவட்ட செயலாளர் -  இ.பெ.செந்தில்குமார்

*  மதுரை மாநகர்  மாவட்ட செயலாளர் -  கோ.தளபதி

*  மதுரை தெற்கு  மாவட்ட செயலாளர் - மு. மணிமாறன்

*  மதுரை வடக்கு  மாவட்ட செயலாளர் - பி.மூர்த்தி 

*  நீலகிரி மாவட்ட செயலாளர் - பா.மு.முபாரக்

*  ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் -சு. முத்துசாமி

*  ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் - என். நல்லசிவம்

*  திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் - இல.பத்மநாபன்

*  திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் - க.செல்வராஜ்

*  கோவை மாநகர் மாவட்ட செயலாளர் - நா.கார்த்திக்

*  கோவை தெற்கு மாவட்ட செயலாளர் - தளபதி முருகேசன்

*  கோவை வடக்கு மாவட்ட செயலாளர் - தொ.அ. ரவி

*  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் - ஒய். பிரகாஷ்

*  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் - தே. மதியழகன்

*  தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் - பெ. பழனியப்பன்

*  தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் - தடங்கம் பெ. சுப்பிரமணி 

*  நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் - எஸ்.எம். மதுரா செந்தில்

*  நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் - கே.ஆர்.என். ராஜேஷ்குமார்

*  சேலம் மத்திய மாவட்ட செயலாளர் - இரா. ராஜேந்திரன்

*  சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் -  டி.எம். செல்வகணபதி

*  சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் -  எஸ்.ஆர். சிவலிங்கம்

*  புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் - சே. ரகுபதி

*  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் - கே.கே.செல்வபாண்டியன்

*  கரூர் மாவட்ட செயலாளர் -  வி.செந்தில்பாலாஜி

*  அரியலூர் மாவட்ட செயலாளர் -  சா.சி. சிவசங்கர்

*  பெரம்பலூர் மாவட்ட செயலாளர் - சி.ராஜேந்திரன் 

*  திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் - க. வைரமணி

*  திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

*  திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் - ந. தியாகராஜன்

*  திருவாரூர் மாவட்ட செயலாளர் - பூண்டி கே.கலைவாணன்

*  நாகை தெற்கு மாவட்ட செயலாளர் - கௌதமன்

*  நாகை வடக்கு மாவட்ட செயலாளர் - நிவேதா எம். முருகன்

*  தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் - கா. அண்ணாதுரை

*  தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் -  துரை. சந்திரசேகரன்

*  தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் - சு.கல்யாண சுந்தரம்

*  கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் -  சி.வெ. கணேசன்

*  கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் -  எம்ஆர்கே. பன்னீர்செல்வம்

*  கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் -  க.வசந்தம் கார்த்திகேயன்

*  கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் -  தா. உதயசூரியன் 

*  விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் - நா.புகழேந்தி

*  விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் - செஞ்சி கே.எஸ். மஸ்தான்

*  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் - எ.வ. வேலு

*  திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் -  எம்.எஸ். தரணி வேந்தன்

*  வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட செயலாளர் - க. தேவராஜி

*  வேலூர் மத்தியமாவட்ட செயலாளர் - எ.பி. நந்தகுமார்

*  வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை) மாவட்ட செயலாளர் -  ஆர்.காந்தி

*  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் - க. சுந்தர்

*  காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் -  தாமோ. அன்பரசன்

*  திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் - எஸ்.சந்திரன்

*  திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் -  சா.மு. நாசர்

*  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் -  டி.ஜே. கோவிந்தராஜன் 

*  சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் -   மா. சுப்பிரமணியன்

*  சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் -   மயிலை த.வேலு

*  சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் -   நே. சிற்றரசு

*  சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் -  பி.கே. சேகர்பாபு

*  சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் -   மாதவரம் எஸ். சுதர்சனம்

*  சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் -   தா.இளங்கோ என்ற இளைய அருணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மூர்த்திக்கு பதில் செந்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகன், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வரதராஜனுக்கு பதில் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரனுக்கு பதில் ரவி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பூபதிக்கு பதில் சந்திரன், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் இன்பசேகரனுக்கு பதில் அமமுகவிலிருந்து வந்த பழனியப்பன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்கு பதில் அண்ணாதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios