Asianet News TamilAsianet News Tamil

தி.மு.கவில் எ.வ.வேலுவுக்கு புதிய பதவி! துணைப் பொதுச் செயலாளர் ஆகிறார்!

தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை நியமிக்க அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

DMK Deputy general secretary... E.V.Velu New post
Author
Chennai, First Published Oct 26, 2018, 11:05 AM IST

தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை நியமிக்க அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.கவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு பிறகு உயர்வான பதவியாக கருதப்படுவது துணைப் பொதுச் செயலாளர். தி.மு.கவின் மிக முக்கியமான மேடைகளில் அதாவது பொதுக்குழு போன்ற மேடைகளில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களுக்கு மட்டுமே நாற்காலிகள் போடப்படும். அந்த அளவிற்கு துணைப் பொதுச் செயலாளர்களுக்கு தி.மு.கவில் அதிக மரியாதை தரப்படும். DMK Deputy general secretary... E.V.Velu New post

பொதுவாக 4 பேர் தி.மு.கவில் துணைப் பொதுச் செயலாளர்களாக இருப்பார்கள். தி.மு.க பொருளாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக ஸ்டாலின் கூட துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார். தற்போது ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் உள்ளனர். துணைப் பொதுச் செயலாளராக இருந்த சற்குண பாண்டியன் காலமாகிவிட்டார். DMK Deputy general secretary... E.V.Velu New post

இதனால் ஒரு துணை பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு எ.வ.வேலுவை நியமிக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். தன்வசம் இருந்த பொருளார் பதவியை யாரிடம் கொடுக்கலாம் என்று ஸ்டாலின் ஆலோசித்த போது துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோரின் பெயர்களை தான் அவர் பரிசீலித்தார். அந்த அளவிற்கு எ.வ.வேலு மீது நம்பிக்கை உண்டு. DMK Deputy general secretary... E.V.Velu New post

ஆனால் சீனியாரிட்டி அடிப்படையில் துரைமுருகனுக்கு பொருளாளர் பதவி சென்றது. இதனால் எ.வ.வேலு சிறிது வருத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே தான் தற்போது துணை பொதுச் செயலாளர் பதவியை கொடுத்து எ.வ வேலுவுக்கு கொடுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios