Asianet News TamilAsianet News Tamil

9 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் பலனில்லை! வேறு வழியில்லாமல் திமுக எடுத்த அதிரடி முடிவு!

தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

DMK Demonstration against the central government in Rameswaram on February 11 tvk
Author
First Published Feb 10, 2024, 6:36 AM IST

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து வரும் 11ம் தேதி ராமேஸ்வரத்தில் திமுக போராட்டம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம்  அறிக்கையில்,: கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர். 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் தமிழக முதல்வர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் செய்த துரோகத்தின் காரணமாகத்தான் கலைஞர் உயிரிழந்தார்.. பரபரப்பு கிளப்பிய ஆர். எஸ் பாரதி

DMK Demonstration against the central government in Rameswaram on February 11 tvk

ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 11ம் காலை 10.30 மணியளவில் ராமேஸ்வரத்தில், திமுக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறுகிறது.

இதையும் படிங்க: முதல்வரே கடிதம் எழுதான மட்டும் போதாது.. சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவது எப்போது? ராமதாஸ்.!

DMK Demonstration against the central government in Rameswaram on February 11 tvk

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்படி நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர் சங்கங்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் திரட்டி ஆர்ப்பாட்டத்தை பெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios