லஞ்சம், ஊழலில் முழுகி திளைத்து கொண்டிருக்கும் திமுக கவுன்சிலர்களின்  அராஜக வன்முறையாட்டங்கள் கட்டுபடுத்த முடியாத எல்லையை எட்டி கொண்டிருக்கிறது. 

லஞ்சம், ஊழலில் முழுகி திளைத்து கொண்டிருக்கும் திமுக கவுன்சிலர்களின் அராஜக வன்முறையாட்டங்கள் கட்டுபடுத்த முடியாத எல்லையை எட்டி கொண்டிருக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் ராமநாயனி குப்பம் ஊராட்சியில் கடந்த 13 ஆண்டுகளாக ராஜசேகர் என்பவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். அவரின் தம்பிக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்று கொண்டிருக்கிறார் திமுகவின் ஒன்றிய கவுன்சிலர் ரவி என்பவர். மேலும் அவரை மிரட்டி, ரவி செய்த வேலைக்கான பணத்தை வங்கியில் எடுத்து தரும்படி ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு அவரை மிரட்டியதோடு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சொல்லி ஊராட்சி செயலர் பதவியில் இருந்து தூக்கி விட்டு துணைத் தலைவரின் மகனை அந்த வேலையில் அமர்த்த போவதாகவும் மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். 

இது தொடர்பாக வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லாத நிலையில் மனமுடைந்த ராஜசேகர், நடந்தவை குறித்து விரிவான கடிதத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். லஞ்சம், ஊழலில் முழுகி திளைத்து கொண்டிருக்கும் திமுக கவுன்சிலர்களின் அராஜக வன்முறையாட்டங்கள் கட்டுபடுத்த முடியாத எல்லையை எட்டி கொண்டிருக்கிறது. பெண் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களின் கணவர்கள் குண்டர்களாகவே மாறி வன்முறை செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகின்றன. லஞ்சம், ஊழல் மூலம் பணம் கொள்ளையடிக்கும் அதிகார அத்துமீறல் காரணமாகவே வன்முறைகள், தற்கொலைகள் நிகழ்கின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இது குறித்து கண்டும் காணாமல் இருப்பது உள்ளாட்சி நிர்வாகங்களை சீர்குலைக்க செய்வதோடு, மக்கள் நல பணிகளை முடக்கி விடும் அபாயம் அதிகரிக்கும்.

ஊழல் எனும் கொடிய நோயை பரவ விடுவது, வளர செய்வது தமிழக அரசுக்கும், தமிழகத்திற்கும் நல்லதல்ல. மேலும், இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதோடு, தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை உணர்ந்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள், குற்றச்செயலில் ஈடுபடும் ஆளும் திமுக கவுன்சிலர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதோடு, புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காக்கும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- ராஜ்ய சபா தேர்தல்.. திமுகவில் எம்.பி. பதவியைப் பிடிக்க போட்டா போட்டி.. உதயநிதி ஆதரவைப் பெறுவதில் மும்முரம்!