Asianet News TamilAsianet News Tamil

ஒற்றை இலக்கத்தில் கொடுத்த திமுக!! ஒன்னு ரெண்டு எக்ஸ்டராவா கிடைக்குமான்னு விழிபிதுங்கி நிற்கும் காங்கிரஸ்...

தமிழகத்தில், திமுக, கூட்டணியில், தமிழக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து, டெல்லியில் பேச்சு துவங்கியுள்ளது.

DMK constituency deal with Congress
Author
Chennai, First Published Feb 18, 2019, 10:12 AM IST

ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய, தொகுதிகள் பட்டியலை வைத்து, காங்கிரஸ் பொருளாளர், அகமது படேல் வீட்டில், ஆலோசனை நடந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக, அரசியல் கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சு நடத்தி வருகின்றன.

திமுக, தலைமையில், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி உறுதியாகி உள்ளது. மதிமுக - விடுதலை சிறுத்தைகள், மமக போன்ற கட்சிகளுடன், தொகுதிகள் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறது. இந்த கட்சிகள், திமுக, கூட்டணியில் இடம் பெறுவது, இன்னும் உறுதியாகவில்லை.

இதற்கிடையில், காங்கிரஸ், கட்சிக்கு ஒதுக்க விரும்பும் தொகுதிகளின் பட்டியலை, அக்கட்சி மேலிடத்தில் ஒப்படைக்கும்படி, சமீபத்தில், திமுக, மகளிர் அணி மாநில செயலாளர், கனிமொழி, முதன்மை செயலாளர், டி.ஆர்.பாலு ஆகியோரை, டெல்லிக்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின். 

DMK constituency deal with Congress

அதேசமயம், தமிழக காங்கிரஸ் தலைவர்,  அழகிரியும், நேற்று முன்தினம் காலை, மேலிட அழைப்பின் படி, அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு, காங்கிரஸ் பொருளாளர், அகமது படேல் வீட்டில், பொதுச் செயலாளர், முகுல் வாஸ்னிக், அழகிரி ஆகியோர், தொகுதி ஒதுக்கீடு குறித்த ஆலோசனையில் நடத்தி வந்தனர்.

கடந்த, 2004, 2009 லோக்சபா தேர்தல்கள், 2016 சட்டசபை தேர்தலின் போது, திமுக, - காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் விபரத்தை, ஆய்வு செய்தனர். மொத்தம் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், காங்கிரசிற்கு சாதகமான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இந்த பணி, இரவு, 2:00 மணி வரை நடந்தது.

DMK constituency deal with Congress

இதனிடையே, காங்கிரசுக்கு ஒதுக்க உள்ள தொகுதிகள் பட்டியலை, அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர்களிடம், கனிமொழியும், டி.ஆர்.பாலுவும், நேற்று ஒப்படைத்தனர். இந்த பட்டியலில், காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள், ஒற்றை இலக்கத்தில் இருந்தன. எனவே, இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கும்படி, காங்கிரஸ், தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இரு தரப்பிலும் பேச்சு நடத்தப்பட்டது. இரு கட்சிகளின் தலைமையிடம், ஆலோசித்த பின், அடுத்தக்கட்டபேச்சில், தொகுதிகள் பங்கீடு இறுதி செய்யப்படும் என காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios