தமிழகத் தேர்தல் களம் விறுவிறுப்பாகிவருகிறது. கட்சிகளின் தேர்தல் கூட்டணி இறுதிக் கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் நாளை திமுக நடத்த உள்ள தென் மணடல மாநாடும், பாஜக - அதிமுக பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றே தொகுதி உடன்பாட்டை நிறைவு செய்ய கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. விருதுநகரில் திமுக சார்பில் தென் மண்டல மாநாடு நாளை பெற உள்ளது. இதேபோல, சென்னையை அடுத்த வண்டலூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக - அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.


திமுக, அதிமுக கட்சிகளின் இந்த இந்த மாநாடும் பொதுக்கூட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இரு கூட்டணியிலும் இடம் பிடித்துள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாகவே தேர்தல் கூட்டணியை இறுதி செய்ய திமுக, அதிமுக கட்சிகள் ஆர்வம் காட்டிவருகின்றன. 
அதிமுக கூட்டணியில் தேமுதிக மட்டுமே இன்னும் இணையாமல் உள்ளது. இன்று நடக்கும் அவரச ஆலோசனைக் கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல திமுக கூட்டணியில் மதிமுக. சிபிஎம் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு இன்னும் ஏற்படவில்லை.

இக்கட்சிகளும் இன்று தொகுதி உடன்பாடு விஷயத்தில் முடிவு எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
இந்தக் கூட்டணிகள் இன்றுக்குள் முடிவாகிவிட்டால், நாளை நடைபெற திமுக தென் மண்டல் மாநாடும், மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டமும் அதிகாரபூர்வ தேர்தல் பிரசார கூட்டமாகவே இருக்கும் இருக்கும். இரு கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் மேடையேறி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிடுவார்கள் என்று நம்பலாம்.