தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்தும் தற்போது அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் அம்மா உணவகத்தில் பலன்கள் கிடைக்காமல் போயிருப்பதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது .  திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தமிழக தலைமை செயலாளருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் ஆகியோருக்கும் அந்த கடிதத்தை இணைத்து அனுப்பியுள்ளார்,   அந்தகடிதத்தில்  கூறப்பட்டுள்ளதன் முழு விவரம் பின்வருமாறு :-  குடிசை வாசிகள் தினக்கூலி தொழிலாளர்கள் வேலையற்ற இளைஞர்கள் நலிந்த மற்றும் நடுத்தர மக்கள் என அனைவருக்கும் சுகாதாரமான உணவை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதே அம்மா உணவகம் .  ஒரு கேண்டீனுக்கு 25 லட்சம் ரூபாய் என நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2020 - 2021 ஆம்  நிதியாண்டில் கூட  தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

பெரும்பாலும் அந்த உணவகத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கு ஆகும் செலவு ,  கட்டுமான தொழிலாளர்கள்  நல நிதியிலிருந்து  திருப்பி செலுத்தப்படுகிறது .  இந்நிலையில் தமிழகம் முழுவதும் 600 அம்மா உணவகங்கள் உள்ளன , சென்னை மாநகராட்சியில்  407 கேன்டீன்களும் கோவையில் 15 கேன்டீன்களும்,  சேலம் கார்ப்பரேஷன் பகுதியில் 11 மற்றும் நகராட்சியில் 4 கேன்டீன்களும்  திருநெல்வேலி , திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன .  ஆனால் இந்த உணவகங்களால்   தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும்  பயன் அடைந்து விட்டனர் என கூற முடியாது .  பல பகுதி மக்களுக்கு இதன் பலன் கிடைக்க வில்லை .  தற்போதுள்ள இந்த கேன்டீன்களை  வைரஸினால்  ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்கும் வகையில் விரிவு செய்ய வேண்டும் . கடந்த 25 - 3- 2020 முதல் தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் , விவசாயிகள் , வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்

ஆனால் இந்த கடினமான நேரத்திலும் அம்மா உணவகங்கள் மக்கள் மத்தியில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது ,  பரவலாக அம்மா உணவகங்களை அமைத்து மாநிலம் முழுவதும் நலிந்த மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் ,  தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியில் ஒரு வெளிப்படையான நன்கொடை பெற்று அம்மா உணவகங்களை விரிவு செய்வதில் எந்தத் தவறும் இல்லை ,  ஆனால் தற்போது அதற்கெல்லாம் மாறாக நகராட்சி அதிகாரிகளின் ஒப்புதலுடன் அம்மா உணவகங்கள் அனைத்தும் அதிமுகவின் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது .  தற்போது ஆளும் அதிமுக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா கேன்டீன்களின் செயல்பாடுகள் நிர்ணயிக்க கூடியவர்களாக மாறிஉள்ளனர். அம்மா உணவகங்கள் அதிமுகவினரிட் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.   இதை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் .  கரூர் குளித்தலை முனிசிபாலிட்டி கமிஷனர் , ஊரடங்கு காலம்வரை முடியும் வரை அம்மா உணவகத்திற்கு ஆகும் செலவை அதிமுக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்

அதேபோல சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு சில உணவகங்களின் செலவை ஏற்பதாக கூறி  அதிமுக வடசென்னை மாவட்ட செயலாளர் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் காசோலை வழங்கியுள்ளனர் ,  மாநகராட்சி அதிகாரிகளும் அவரிடம் நிதி பெற்றுள்ளனர் .  ஆனால் எங்கள் கட்சித் தலைவர் எம்.கே ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ திரு பி .கே சேகர்பாபு அவர்களின் கொளத்தூர் தொகுதியில்  மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க அனுமதி கேட்டு மனு கொடுத்தும் அதற்கு இதுவரை  எந்த பதிலும் இல்லை , ஆனால்  அம்மா கேன்டீன்களை ஆளும் அதிமுக கட்சியினர் வலுக்கட்டாயமாக  கையகப்படுத்தி வருகின்றனர்.  இதன் மூலம் அதிக அளவில் டோக்கன்களை பெற்றது அதிமுகவினருக்கு வழங்கப்படுவதாக தெரிகிறது .  இதனால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவகத்தின் பலன் சென்று சேர்வது தடுக்கப்பட்டுள்ளது .  அதிமுக இலவசமாக உணவு வழங்குவதாக அம்மா உணவகத்தில் வெளியில் நோட்டிஸ்கள் அதிமுகவினரால் ஒட்டப்படுகிறது ,  அரசு இயந்திரத்தில் கட்சித் தலையீடு  மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும்

தற்போதைய அம்மா உணவகத்தை முழுவதுமாக அதிமுக அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது,  தற்போது அதிமுகவினருக்கு அதிகாரத்தை பயன்படுத்தி  சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொள்கிறது  . இப்போது அதிகாரிகள் முழுவதுமாக அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர் .  இந்நிலையில் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியான திமுக ,  அம்மா உணவகங்களில் விற்கப்படும் உணவுகளுக்கான  விலையை   ஏற்க தயாராக உள்ளது . திமுகவுக்கும் அனுமதி வழங்கவேண்டும்  எனவே இந்த விவகாரத்தில் அரசு ஒரு வெளிப்படை தன்மையான நியாயமான திட்டத்தை வகுக்குமாறு திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என கூறுப்பட்டுள்ளது.