Asianet News TamilAsianet News Tamil

ஒன்றிணைவோம்வா திட்டத்தின் மூலம் திமுக வசூல் வேட்டை... கே.பி.ராமலிங்கம் அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

"ஒன்றிணைவோம் வா" திட்டம் மூலம் திமுக வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.

DMK collections hunt ... KP Ramalingam shock charge
Author
Tamil Nadu, First Published Jun 13, 2020, 10:26 AM IST

"ஒன்றிணைவோம் வா" திட்டம் மூலம் திமுக வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.

தி.மு.க. விவசாய அணி செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம் 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்தார். இந்நிலையில்,  கட்சி நடவடிக்கைகளில் இருந்து கே.பி.ராமலிங்கம் அதிக ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கி இருந்தார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டவேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.DMK collections hunt ... KP Ramalingam shock charge

இதுகுறித்து கருத்து தெரிவித்த கே.பி.ராமலிங்கம் கட்சி தலைமையின் கருத்தை மீறி, மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது. அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லாதது என தெரிவித்திருந்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிரான கருத்தை  கே.பி.ராமலிங்கம் தெரிவித்ததால் தி.மு.க.வில் இருந்து கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கே.பி.ராமலிங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.DMK collections hunt ... KP Ramalingam shock charge

மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததற்காக நன்றி தெரிவித்த அவர், குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம், "ஒன்றிணைவோம் வா" திட்டம் மூலம் திமுக  வசூல் வேட்டை நடத்தியதாக குற்றம்சாட்டினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios