முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

5 முறை முதல்வராக இருந்தவரும், தொடர்ந்து 50 ஆண்டுகள் திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். 

இதைதொடர்ந்து கருணாநிதிக்கு, கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திறக்க கட்சியினர் முடிவு செய்தனர். இதற்கான சிலை வடிவமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையொட்டி வரும் 16ம் தேதி சிலை திறப்பு விழா நடக்க உள்ளது. இதில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வர் நாராயணசாமி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வ பினராயி விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட பல முக்கிய கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , வரும் 9-ம் தேதி டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். அன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, வரும் 16-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.