தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அவர் , வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 18-ம் தேதி, காவேரி மருத்துவமனைக்குச் சென்று ஒரே நாளில் வீடு திரும்பினார். அப்போது டிரக்யாஸ்டமி கருவியில் உள்ள பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் மாற்றப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், தற்போது மருத்துவமனைக்கு சென்று வந்ததிலிருந்தே அவர் சோர்வாகவே இருக்கிறார் படுக்கையிலிருந்து தூக்கி உட்கார வைத்தாலும், உட்காராமல் துவண்டு  படுத்துக் கொள்கிறாராம். கருணாநிதி உடல்நிலையில் வழக்கத்தைவிட சோர்வு காணப்படுகிறாராம்,  நாளுக்கு நாள் அவரது உடல் துவண்டபடியே  இருக்கிறதாம்.

மருத்துவமனைக்குப் போய்விட்டு வந்த பிறகு,  செல்வி, தமிழரசு என நெருக்கமானவர்கள் வந்து கூப்பிட்டாலுமே எந்தவித  அசைவும் இல்லாமல் இருக்கிறாராம்.  

இந்நிலையில், லண்டனிலிருந்து திரும்பிய  ஸ்டாலின், அன்றைய தினம் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று பார்த்துள்ளார். அருகில் இருந்து, மருத்துவமனையில் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், உடல்நிலைகுறித்து கேட்டாராம். அப்போது மருத்துவமனைக்குச் சென்றபோது அவரைப் பரிசோதித்த டாக்டர்களும், சில தகவல்களைச் சொல்லியே அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதையும் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனையடுத்து, தனது உறவினர்களை உடனடியாக வீட்டுக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார்.

‘நான் இதுவரைக்கும்  அப்பாவ இப்படி இருந்து பார்த்ததே இல்லை. வீட்டில் வைத்தே சிகிச்சை தரலாமா? இல்லை  மருத்துவமனையில் சேர்க்கலாமா?’ என்று கவலையுடன் கேட்டாராம். ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாராம் ஸ்டாலின்.”

இதற்கு முன்பாக கருணாநிதியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் சீரியசாக இருக்கிறார். இதயம் மட்டும்தான் துடிக்கிறது என சொன்னார்களாம்.  இந்த தகவலை அப்படியே முதல்வர் எடப்பாடியிடம் தெரிவித்துள்ள துரைமுருகனும், ஏ.வ.வேலுவும், " ஏதேனும் ஆச்சுன்னா, அண்ணா சமாதியில் இடம் வேண்டும் " என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எடப்பாடி  மறுப்பேதும் சொல்லவில்லை. லங் கேன்சர் வந்துள்ளது. ஆகவே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவில்லை. எதுவும் நடக்கலாம். அனைவரின் வெளியூர் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது வாட்ஸ் ஆப், ட்விட்டர் .அற்றும் முகநூலில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப் பூர்வ தகவல் திமுக தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

திமுக வட்டாரத்தில் விசாரிக்கையில், கோபாலபுரம் இல்லத்தில் அவர் நலமாக இருப்பதாகவே சொல்கிறார்கள்.