ஜனநாயக நாட்டில் விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரனை டுவிட்டரில் ஆபாசமாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பத்தரிகையாளர் தன்யா ராஜேந்திரன், அண்மையில் வெளியான ஷாருக்கானின் திரைப்படத்தை டுவிட்டரில் விமர்சனம் செய்தார். அந்த விமர்சனத்தில், நடிகர் விஜய் நடித்த சுறா திரைப்படமேமேல் என்று கூறியிருந்தார்.

இதற்கு, நடிகர் விஜய் ரசிகர்கள், பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரனுக்கு ஆபாசமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள், இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களில் 35 ஆயிரம் பதிவுகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த டுவிட்டர் பதிவு தொடர்பாக பத்திரிகையாளர் தன்யா நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அவரின் புகாரின் அடிப்படையில், விஜய் ரசிகர்கள் இருவர் மீது, பெண் வன்கொடுமை, பொது இடத்தில் பெண்களை தவறாக பேசுவது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து பரபிப்பியோருக்கு திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவதூறு கருத்துகள் பரப்புவது வருந்தத்தக்க, கண்டிக்கதக்க செயலாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஜனநாயக நாட்டில் விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் தெரவித்துள்ளார்.