Asianet News TamilAsianet News Tamil

கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்திருக்க வேண்டியவர் எடப்பாடி பழனிச்சாமி... பகீர் தகவலை வெளியிட்ட திமுக எம்.பி.!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் தன் சகோதரர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் ஆயுள் கைதி ஆகவேண்டியவர். விசாரணையில் சாட்சிகள் பிறழ் சாட்சிகள் ஆனதால் விடுதலை செய்யப்பட்டார். அதிமுக ஆட்சிக் காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அந்தக் கொலை வழக்கிலிருந்து வெளிவர உதவியவர் செங்கோட்டையன். 

Dmk charged Edappadi palanisamy
Author
Chennai, First Published Nov 13, 2019, 7:14 AM IST

அதிமுக ஆட்சி காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொலை வழக்கிலிருந்து தப்பித்து வந்தவர் எனும் பகீர் தகவலை திமுக எம்.பி.யும் அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ளார்.Dmk charged Edappadi palanisamy
ஒவ்வொரு விவகாரத்திலும் திமுக, அதிமுகவினர் வழக்கம்போல அறிக்கைகள் வெளியிட்டு சாடிவருகின்றனர். ஆனால். மு.க. ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு ஏதோ காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டார் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியது திமுகவினரை கடும் கோபம் கொள்ள செய்துவிட்டது. சற்று குறைந்திருந்த திமுக - அதிமுக மோதல் ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல மாறிவிட்டது. இந்த மோதலுக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொலை வழக்கிலிருந்து அதிமுக ஆட்சியால் தப்பித்து வந்தவர் எனப் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி.Dmk charged Edappadi palanisamy
இதுதொடர்பான தகவல் திமுகவின் கலைஞர் செய்திகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் தன் சகோதரர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் ஆயுள் கைதி ஆகவேண்டியவர். விசாரணையில் சாட்சிகள் பிறழ் சாட்சிகள் ஆனதால் விடுதலை செய்யப்பட்டார். அதிமுக ஆட்சிக் காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அந்தக் கொலை வழக்கிலிருந்து வெளிவர உதவியவர் செங்கோட்டையன். கொலைக் குற்றவாளிதான் தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார்.

Dmk charged Edappadi palanisamy
எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வரும் கருத்துகள் அவர் மீதான குற்ற வழக்குகளையும் உண்மை நிகழ்வுகளையும் மக்கள் மத்தியில் விளக்கவேண்டிய கட்டாயத்தை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது” என ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios