வேலூர் அருகே கார் விபத்தில் சோளிங்கர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அசோகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அசோகன் போட்டியிடுகிறார். இதனிடையே 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு திமுக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும் திமுக தரப்பில் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சோளிங்கர் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அசோகன் அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சார பணிகளுக்காக தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி எதிர்பாராத விதமாக பேருந்து மீது கார் மோதியது.

 

இந்த விபத்தில் அசோகன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மேலும் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காயமடைந்த அசோகனை உடனே மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.