dmk campaign in rk nagar

ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்கே நகர் தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திமுக, அதிமுகவின் 3 அணி, பாஜக, தேமுதிக என ஆறுமுனை போட்டி அங்கு நிலவுகிறது.

வேட்பாளர்களான திமுகவில் மருதுகணேஷ், அதிமுக சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ்.அணியில் மதுசூதனன், 3வது அணியாக தீபா ஆகியோர் தொண்டர்கள் மூலம் ஆங்காங்கே ஆலோசனை கூட்டம் நடத்தி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சுற்றி, பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இன்று காலை வண்ணாரப்பேட்டை வீராகுட்டி தெருவில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்ட சென்றார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அதேபோல் புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெரு, மற்றும் காசிமேடு பகுதகிளுக்கு சென்று மீனவ சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, அங்கு ரேஷன் கடைகளில் இருந்த பெண்கள், பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

ராயபுரம் சூரியநாராயண செட்டி தெருவில் உள்ள இந்திய மீனவர் கூட்டமைப்பு சங்க தலைவர் தயாளனை சந்தித்து, திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆதரவு திரட்டினார். அப்போது, அங்கு வந்த சமக தலைவர் சரத்குமார், திமுக வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தார்.