ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத இந்த நேரத்தில் கண்டிப்பாக அரசியலில் களமிறங்கவேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்து விட்டார் ரஜினிகாந்த்.

ரஜினியால் மிகவும் மதிக்கப்பட்ட தலைவர் கருணாநிதி. அதேபோல், ஜெயலலிதாவின் ஆளுமை மீது, மிகவும் மரியாதை கொண்டவர் ரஜினி.

அவர்கள் இருவரும் ஆக்டிவாக இருந்த காரணத்தால், அரசியலில் குதிப்பது குறித்த முடிவை ,தொடர்ந்து ஒத்தி வைத்து கொண்டே இருந்தார் ரஜினி.

ஆனால், ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை. கருணாநிதி அரசியலில் மீண்டும் ஆக்டிவாக இறங்க வாய்ப்பதில்லை என்பது உறுதியாகி விட்டது.

அதனால், அரசியலில் இறங்குவது குறித்து உறுதியாக இருக்கிறார் ரஜினி. அதன் ஒருபகுதியாகவே, பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரசிகர்களோடு புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியை அவர் மீண்டும் தற்போது தொடங்கினார்.

அந்த நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சு, அரசியல்வாதிகள் பலபேரை உசுப்பிவிட்டுவிட்டது. அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோர் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு, தங்களது எதிர்ப்பை நேரடியாகவே பதிவு செய்து விட்டனர்.

ஆனால், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மட்டும், ரஜினியின் பேச்சை ஆதரிக்க முடியாமலும், எதிர்க்க முடியாமலும் தவித்து வருகிறார்.

மேலும், ரஜினியின் அரசியல் பிரவேசம், ஸ்டாலின் ஆதரவாளர்களை மிகவும் அப்செட் ஆக்கி இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர், ஸ்டாலினுக்கு இப்போதுதான் நேரம் கூடி வந்து கொண்டிருக்கிறது. அவர் நினைப்பதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது ரஜினி, அரசியலில் பிரவேசம் செய்தால், அது ஸ்டாலின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.

கருணாநிதிக்கு கட்டுப்பட்டது போல, ஸ்டாலினுக்கும் ரஜினி கட்டுப்படுவார் என்று எதிர்பார்க்க முடியுமா? இதை அவரிடம் யாரால் சொல்ல முடியும் என்றும், ஸ்டாலின் ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.

ஒரு ஜாதகத்தில் அசுர குருவான பிரகஸ்பதியும், தேவ குருவான சுக்கிரனும் ஒரே இடத்தில் இருந்தால், அவர் அரசியலில் உயர் பதவியை அடைவது சிரமம். அதே சமயம், சனி பகவான், அந்த கிரக சேர்க்கையை பார்த்தால் அந்த தோஷம் விலகும்.

ஸ்டாலின் ஜாதகத்தை பொறுத்தவரை, குரு-சுக்கிரன் சேர்க்கை உள்ள ஜாதகம். அந்த சேர்க்கையை சனி பகவான் பார்க்கவில்லை. அதனால், அவரால், கடைசி வரை முதலமைச்சர் பதவியில் அமர முடியாது என்கின்றனர் ஜோதிடர்கள்.

இதே போன்ற குரு-சுக்கிரன் சேர்க்கை உள்ள மூப்பனார், சோனியா காந்தி போன்றவர்களுக்கு, பிரதமர் பதவி நெருங்கி வந்த போதும், அந்த பதவியில் அவர்களால் அமரமுடியாமல் போனதை அவர்கள் சுட்டி காட்டு கின்றனர்.

உண்மையில், திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஸ்டாலினால் முதல்வர் பதவியில் அமர முடியாது என்பது விதி. அந்த விதி ரஜினி ரூபத்தில் வருகிறது என்றே நினைக்கின்றனர் திமுக தொண்டர்கள்.