கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. அவரின் இறுதி ஊர்வலத்தை ஒரு ஊடகம் இப்படி வர்ணிக்கிறது...,கலைஞரின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது ராஜாஜி அரங்கம், அந்த அரங்கத்தை நிர்மாணித்தவர் கலைஞர்...,கலைஞரின் இறுதி யாத்திரை அவரின் ஆசான் பெரியார் சிலை அருகே வருகிறது. அந்த சிலையை அமைத்து அதை திறந்தவர் கலைஞர்...,தந்தையின் சிலை தாண்டி தனயன் உடல் வருகிறது,அது. 

 

ஓமந்தூரார் தோட்டம். அங்கே தான் தான் பார்த்து பார்த்து செதுக்கிய புதிய தலைமைச்செயலகம். அந்த கட்டிடத்தையும் இறுதியாக கடக்கிறார்...,அடுத்து தன் தலைவன் சிலை வருகிறது, அது தன் அண்ணனுக்கு தம்பி வைத்த சிலை. அந்த சிலையையும் தாண்டி கலைஞரின் இறுதி பயணம், தான் மிகவும் நேசித்த சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே வருகிறது...,இப்போது அதையும் தாண்டி, தான் அமைத்த எழிலகம் தாண்டி தென்னிந்தியாவிலேயே ஒரே சிலையான பாபு ஜெகஜீவன் ராம் சிலை தாண்டி, அண்ணனுக்கு தான் அமைத்த அண்ணா நினைவிடம் நோக்கி இறுதி பயணம் செய்து தான் இரவலாக பெற்ற அண்ணாவின் இதயத்தை அண்ணனின் காலடியில் சமர்ப்பித்தார்...,

ஒரு தலைவன் என்பவன், எப்படி வாழவேண்டும் அவன் வாழ்க்கை சாதனைகள் என்ன என்பதை இறுதி ஊர்வலம் தான் சொல்ல வேண்டும்....அப்படிப்பட்ட தன்னிகரில்லா தலைவனை பார்த்து சிலர் கேட்கிறார்கள், கலைஞர் அப்படி என்ன செய்து விட்டார் என்று..!
இவ்வாறு ஒரு தொண்டர் எழுதியுள்ள கடிதம் வேகமாக பரவி  திமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.