சென்னை காவேரி மருத்துவமனையில்  திமுக தலைவர் சிகிச்சை வரும் நிலையில் ஆஸ்பத்திரி முன்பு  நூற்றுக்கணக்கான  தொண்டர்கள் விடிய, விடிய கூடியிருந்னர். தொடர்ந்து அவர்கள் இரவு முழுவதும் எழுந்து வா தலைவா.. என கோஷமிட்டபடியே இருந்தனர். சில தொண்டர்கள் கண் அயர்ந்த போதெல்லாம் எழுந்து வா தலைவா முழுக்கம் அந்த ஏரியாவை அதிர வைத்தது.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று மாலை சற்று மோசமடைந்தது. இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளி  வந்ததும் தொண்டர்களிடைபே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தொண்டர்கள் மீது தடியாடி நடத்தினர்.

இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நம் அனைவரின் அன்புக்குரிய தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு, டாக்டர்களின் தீவிர சிக்கிச்சைக்கு பிறகு தற்போது தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது.

ஆகவே தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுத்து விடாமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என அறிக்கை அளித்தார். இதையடுத்து தொண்டர்கள் சிலர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆனாலும் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் இரவு முழுவதும் விடிய விடிய  கோஷமிட்டபடியே இருந்தனர். தொடர்ந்து அவர்கள் இரவு முழுவதும் எழுந்து வா தலைவா.. என கோஷமிட்டபடியே இருந்தனர். சில தொண்டர்கள் கண் அயர்ந்த போதெல்லாம் எழுந்து வா தலைவா முழுக்கம் அந்த ஏரியாவை அதிர வைத்தது.