திமுகவும் தேச பக்தியும் எப்போதும் ஒன்று சேராது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க.விற்கு, 2021 சட்டப்பேரவை தேர்தலில், மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். தமிழகத்தில், தற்போது நிலைமை மாறி உள்ளது. இளைஞர்கள், படித்தவர்களிடம், தேசபக்தி உணர்வு அதிகரித்துள்ளது. இனிமேல் தி.மு.க.வின் பழைய கால அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது. 

உலக நாடுகளில் இருந்து காஷ்மீர் விவகாரத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில், மக்கள் ஆதரவு அளித்ததால், காங்கிரஸ் எம்.பி.க்களும் ஆதரவு அளித்துள்ளனர். இது பா.ஜ.க.விற்கும் பிரதமர் மோடிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்று புகழ்ந்துள்ளார். ராமர் கோவில் வேண்டும் என்று 82 சதவீத இந்துக்கள் கூறுவதாகவும், அதே போல எங்கள் முன்னோர்கள் இந்து, அதனால் ராமர் கோவில் இருந்தால் ஆட்சேபம் இல்லை என்று இஸ்லாமியர்கள் கூறுவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். 

எல்லாப் பிரச்சனைகளுக்கும், பா.ஜ.க. சமாதானம் தேடுவதால் தான், காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களே அதை ஆதரித்துள்ளனர். மாநிலங்களவையில் போதிய ஆதரவு இல்லாத போதிலும் காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது என சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.