Asianet News TamilAsianet News Tamil

திமுக, காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு இந்த வியாதி இருக்குது.. பொளந்து கட்டிய வானதி சீனிவாசன்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், நுாபுர் சர்மா பேசியதற்காக, இந்திய நாடே மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து அறிக்கை விட்டன.

DMK and Congress parties have the disease of selective secularism said kovai bjp mla vanathi srinivasan
Author
First Published Jul 1, 2022, 5:13 PM IST

வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ‘ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், அப்பாவி தையல் கடைக்காரர் கண்ணையாலாலை மத அடிப்படைவாதிகள், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதை வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட, ஒட்டுமொத்த நாடும் இந்த கொடூரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது. 

DMK and Congress parties have the disease of selective secularism said kovai bjp mla vanathi srinivasan

மேலும் செய்திகளுக்கு.. கோவை மேயர் வீட்டை அழகுபடுத்த ரூ 1 கோடியா..? அதிமுக கவுன்சிலரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

நுாபுர் சர்மா

இந்த வீடியோவில் பிரதமர் மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஜூன் 10-ம் தேதி கண்ணையாலாலை, ராஜஸ்தான் மாநில அரசு கைது செய்தது. தனக்கு 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்த தெரியாது என்று, அவர் போலீசாரிடம் கூறியிருக்கிறார்.கடந்த 15-ம் தேதி, ஜாமினில் வெளிவந்த அவர், தனக்கு கொலை மிரட்டல் வருவது குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

DMK and Congress parties have the disease of selective secularism said kovai bjp mla vanathi srinivasan

மேலும் செய்திகளுக்கு.. டுவிட்டர் பக்கத்தில் தனது அதிமுக பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி.. !

காங்கிரஸ் & திமுக

அப்பாவியான தையல் கடைக்காரரை கைது செய்து, அவரை மத வெறியர்களுக்கு ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு அடையாளம் காட்டியதே, இந்த கொடூரத்திற்கு காரணம்.தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், நுாபுர் சர்மா பேசியதற்காக, இந்திய நாடே மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து அறிக்கை விட்டன.

DMK and Congress parties have the disease of selective secularism said kovai bjp mla vanathi srinivasan

ஆனால், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற செயலால், அப்பாவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டும், 'செலக்டிவ்' மதச்சார்பின்மை வியாதியால் பீடிக்கப்பட்ட தலைவர்கள், எதுவுமே நடக்காதது போல மவுனமாகி விட்டனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.. SP Velumani: எஸ்.பி வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்.!

Follow Us:
Download App:
  • android
  • ios