சென்னையில் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் மீண்டும் நடக்கும். அப்படி இடைத்தேர்தல் நடந்தால் அங்கு காங்கிரஸ் வேட்பாளர்தான் மீண்டும் போட்டியிடுவார்.
 நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளில் திமுக - காங்கிர்ஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதிமுகவின் பணப்பலம் இங்கே வாக்காளர்களிடம் எடுபடவில்லை. தேர்தல் முடிந்த அடுத்த நாளே உர விலை அதிரிக்கப்பட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு செய்கிற துரோகமாகும். இந்த உர விலை உயர்வை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா? இதற்கு ஒரு முழம் கயிறை கொடுத்து விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ளச் சொல்லியிருக்கலாம்” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.