திமுக, அதிமுக அண்ணன், தம்பி.. டிடிவி.யை சந்திக்க வாய்ப்பு இருந்தால் சந்திப்பேன்.. ஓபிஎஸ் சரவெடி..!

அதிமுக கூட்டணி அமைத்தால் சேரத் தயார் என்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கருத்தை வரவேற்கிறேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

DMK and aiadmk are brothers... panneerselvam Speech

அதிமுக கூட்டணி அமைத்தால் சேரத் தயார் என்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கருத்தை வரவேற்கிறேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அரசு கொறடா துரை. கோவிந்தராஜன் (85) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது குடும்பத்திற்கு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து, திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம்;- அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுக ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை. எங்களை யாராலும் மிரட்ட முடியாது. 

இதையும் படிங்க;- அன்று தவழ்ந்து முதல்வர் பதவி பெற்று.. சசிகலாவிற்கே துரோகம் செய்தவர் இபிஎஸ்.. சும்மா இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்.!

DMK and aiadmk are brothers... panneerselvam Speech

அதிமுகவின் தலைமையில் பிரச்னை உள்ளது போல் மாயத் தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அதிமுகவில் சில சில பிரச்சனைகள் வரும், அது சரியாகிவிடும். திமுக, அதிமுக அண்ணன், தம்பி தான். ஆனால், 2 கட்சிகளும் வேறுவேறு பாதையில் பயணிக்கின்றன. நாங்கள் எம்ஜிஆர் உருவாக்கிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். திமுக அவர்களின் பாதையில் பயணிக்கிறார்கள். 

இதையும் படிங்க;- ஓபிஎஸ் அணிக்கு புதிதாக மாநில நிர்வாகிகள், கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம்..! யார், யார் தெரியுமா.?

DMK and aiadmk are brothers... panneerselvam Speech

அதிமுக கூட்டணி அமைத்தால் சேரத் தயார் என்ற டிடிவி.தினகரன் கருத்தை வரவேற்கிறேன். டிடிவி. தினகரனை சந்திக்க வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக சந்திப்பேன் என்றார். அதிமுகவில் அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக உள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரவுள்ள பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios