அம்பலமானது திமுக - அமமுக கள்ள உறவு... அமைச்சரின் அலப்பறை..!

திமுகவிற்கும் தினகரன் கட்சியினருக்கும் உறவு உள்ளது மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த பிரச்சனை மூலம்
அம்பலமாகிவிட்டது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

DMK AMMK relationship... Minister rajendra balaji

திமுகவிற்கும் தினகரன் கட்சியினருக்கும் உறவு உள்ளது மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த பிரச்சனை மூலம்
அம்பலமாகிவிட்டது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒட்டப்பிடாரம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். DMK AMMK relationship... Minister rajendra balaji

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திமுகவிற்கும் அமமுகவிற்கும் உள்ள உறவு உள்ளது. அது மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த பிரச்சனை மூலம் தெரிந்து விட்டது என்றார். இந்த தேர்தலில் ஸ்டாலின், தினகரன் ஆகியோருடைய கபடநாடகம் எடுபடாது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கும் ராஜ மேளம் மட்டுமே எடுபடும் என்று தெரிவித்தார். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இந்த இயக்கத்தை மக்கள் போற்றும் இயக்கமாக வழிநடத்தி வருகிறார்கள். DMK AMMK relationship... Minister rajendra balaji

மேலும் அவர் பேசுகையில் ஒட்டபிடாரம் இடைத்தேர்தலில் திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழப்பார்கள். நடைபெற உள்ள 4 இடைத்தேர்தல் மற்றும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். அமமுகவிற்கு வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக திமுகவுக்கு இடையே தான் போட்டி என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். DMK AMMK relationship... Minister rajendra balaji

3 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட மூவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே கொறடா சபாநாயகரிடம் புகார் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios