திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. மக்களவை தேர்தலில் திமுகவில் எப்போதும் இல்லாத அளவிற்கு வாரிசுகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. 

திமுக கூட்டணி கட்சியினருக்கு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை ஒதுக்கி விட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் களமிறங்க உள்ளது அந்தத் தொகுதிகளில் கட்சியில் உள்ள நிர்வாகிகளின் வாரிசுகளை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது கட்சித் தலைமை. அதன்படி வடசென்னையில் ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி போட்டியிடுகிறார். கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகன் கவுதம சிகாமணி களமிறங்குகிறார். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூரில் பலம் காட்ட உள்ளார்.

 

கடலூர் தொகுதி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகன் கதிரவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய சென்னையில் தயாநிதிமாறனும், தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலுவும் களமிறங்க உள்ளனர். தூத்துக்குடியின் கனிமொழி களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இன்னும் சில வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆக 20 தொகுதிகளில் களம் காணும் திமுக 10 தொகுதிகளை வாரிசுகளுக்கு ஒதுக்கி உள்ளது. 

அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், காஞ்சிபுரத்தில் மூர்த்தி, திமுக ஆகியோரும் போட்டியிடப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளிடுவார் எனக் கூறப்டுகிறது. பெரம்பலூரில் உதயசூரியன் சின்னத்தில் ஐஜேகே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட இருக்கிறார்