திமுக கூட்டணிக் கட்சிகள் அதிமுகவுக்கு வரப்போகுதாம்.. ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஜெயக்குமார்..!
எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து கை தூக்கியுள்ளார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் நாங்கள் விலகி கொள்கிறோம் என்று ஆம் ஆத்மி குரல் கொடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் சிபிஎம்க்கும் பிரச்சனை, கேரளாவில் சிபிஎம்க்கும் காங்கிரஸீக்கும் பிரச்சனை எப்படி ஒத்துப்போகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தான் முடிவெடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளிக்கையில்;- நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தான் முடிவெடுக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன. எங்கள் கூட்டணிக்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் வர வாய்ப்புள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து கை தூக்கியுள்ளார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் நாங்கள் விலகி கொள்கிறோம் என்று ஆம் ஆத்மி குரல் கொடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் சிபிஎம்க்கும் பிரச்சனை, கேரளாவில் சிபிஎம்க்கும் காங்கிரஸீக்கும் பிரச்சனை எப்படி ஒத்துப்போகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
வேங்கை வயல் விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக நீதி குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை. அம்மாவோட ஆட்சியில் தான் மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அம்மா மினி கிளினிக் எடுத்துவிட்டு நகர் புற நல்வாழ்வு மையங்களை திமுக அரசு நிறுவியுள்ளது. ஆனால் விடியா அரசு அதற்கெல்லாம் மூடிவிட்டு ஸ்டிக்கர் ஒட்டி வேறொரு பெயரில் தற்பொழுது திறந்து வருகிறது என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
பல அசிங்கத்தையும் அவமானத்தையும் கடந்துதான் விட்ட சவாலில் ஜெயித்து முதலமைச்சராக அன்று சட்டசபைக்குள் நுழைந்தவர் ஜெயலலிதா. அரசியலில் குதித்தால் போதாது அதில் நீச்சல் அடித்து வர தெரியபவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். அடுத்த தலைமுறை விஜய்தான் என செல்லூர் ராஜூ ஏன் பேசினார் என நான் தொலைபேசியில் அவரிடம் விசாரிக்கிறேன் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.