திமுக கூட்டணி கட்சிகள் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளன.... செங்கோட்டையன் புகார்!!

திமுக கூட்டணிக் கட்சிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். 

dmk alliance parties are involved in violations says sengottaiyan

திமுக கூட்டணிக் கட்சிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதையும் படிங்க: பிரபாகரனை காட்டினால் சந்திக்க தயார்... கே.எஸ்.அழகிரி பரபரப்பு கருத்து!!

இதேபோல் தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அந்தந்த கட்சி வேட்பாளர்கள் மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: பசி, பட்டினியால் இனி ஒரு உயிர் போகக்கூடாது.. வறுமை மட்டும் மாறவில்லை - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை !

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோட்டில் பல இடங்களில் அனுமதி பெறாமலேயே திமுக கூட்டணிக் கட்சிகள் கூடாரங்கள் அமைத்துள்ளனர். விதிமுறைகளுக்கு எதிராக நடக்கின்ற செயல்களை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் செங்கோட்டையன் புகாரும் அளித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios