தென் தமிழகம் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. 3 ஆண்டுகளில் தமிழக எம்பிக்கள் என்ன செய்தார்கள் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகின்றன. ஆனால், கொடுத்த 505 வாக்குறுதிகளில் எந்த முக்கியமான வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. குடும்ப பெண்களுக்கு ரூ. 1000 வழங்கவில்லை, அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. மின் கட்டண உயர்வை உயர்த்திவிட்டார்கள். திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு பின்பு மக்கள் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள். மத்திய அரசைதான் தமிழக அரசு எப்போதும் குற்றம் சாட்டுகிறது. பட்டாசு தொழில் முடங்கி வருகிறது. சரவெடிக்கு தடை விதிப்பதால் இந்தத் தொழிலே கிடையாது. மத்திய மாநில அரசுகள் இணைந்து பட்டாசு தொழிலை காக்க வேண்டும்.
இதையும் படிங்க: அதிமுக வரட்டும்.. உன்னையும், உன் பையனையும் பார்க்க போறோம் அறிவாலயத்தையும் பார்க்க போறோம்..CV.சண்முகம்.

விருதுநகர் மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். சிவகாசியைக் கந்தக பூமி என்று கூறாமல் வேளாண்மை பூமியாக மாற்ற வே ண்டும். டெல்டா மாவட்டங்களை மட்டுமே கவனம் செலுத்தாமல் தமிழ்நாட்டில் மிகவும் வறண்ட பகுதியான விருதுநகர், தூத்துக்குடி, மதுரையில் கவனம் செலுத்த வேண்டு. அதற்காக வேளாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். இந்த விஷயத்தை மாநில அரசு பரந்த நோக்கத்தோடு பார்க்க வேண்டும். பள்ளியில் தேர்ச்சி பெறுவதை வைத்து கல்வி நிறுவனங்கள் கல்வியை வியாபாரமாக்கி வருகின்றன. பள்ளியில் குழந்தைகளை டார்ச்சர் செய்கிறார்கள்.
இதையும் படிங்க: பாஜகவின் பரிபூரண ஆசி யாருக்கு.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸை பிரதமர் மோடி சந்திப்பாரா.? எதிர்பார்ப்பில் இரட்டை தலைமை!

இதுபோன்ற மன அழுத்தங்களை தடுக்கவும் டார்ச்சர் செய்வதை தடுக்கவும் விடுதிகளில 4 மணிக்கு எழுப்புவதை தடுக்க வேண்டும். இதனால் தற்கொலையைத் தடுக்க முடியும். கல்வி நிறுவனங்களை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற பகுதியில்தான் தவறுகள் நடக்கின்றன. புதிய தமிழகம் கட்சி தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தென் தமிழகம் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. 3 ஆண்டுகளில் தமிழக எம்பிக்கள் என்ன செய்தார்கள்? திமுக, அதிமுகவால் இனி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாது. அவர்கள் தேய்ந்து போன டேப்ரிகார்டர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பதை இப்போதே கூற முடியாது” என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: “நீட் தேர்வு தோல்வியால் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தற்கொலை” .. மீண்டும் உளறிக்கொட்டிய மாஜி அமைச்சர்.!
