தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக ஒரு கூட்டணியாகவும், திமுக ஒரு கூட்டணியாகவும் களமிறங்க உள்ளது.

அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ்-10, இந்திய கம்யூனிஸ்ட்-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -2, விடுதலை சிறுத்தைகள்-2, மதிமுக-1, ஐஜேகே-1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-1 என 40 தொகுதிகளை பிரித்து போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக- 5 பாமக- 7 தேமுதிக- 4, புதிய நீதிக் கட்சி- 1, புதிய தமிழகம்- 1, தமாகா- 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதிமுகவும்- திமுகவும் தலா 20 இடங்களில் போட்டியிடுகின்றன.

அதன்படி காங்கிரஸ் கட்சி-10 இடத்தில் கை சின்னத்தில் போட்டியிடுகிறது, இடதுசாரிக் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நான்கு இடங்களில் கதிர் அரிவாள், மற்றும் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடுகிறது. முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது. விடுதலை சிறுத்தைகள் ஒரு தொகுதியில் சுயேட்சையான பானை சின்னத்திலும் மீதமுள்ள ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, ஐஜேகே ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அதன்படி திமுகவின் உதயசூரியன் சின்னம் 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  
 
இரட்டை இலை சின்னத்தில் அதிமுக 20 இடங்களிலும், பாமக மாம்பழம் சின்னத்தில் 7 இடங்களிலும், பாஜக ஐந்து தொகுதிகளில் தாமரை சின்னத்திலும் தேமுதிக நான்கு இடத்தில் முரசு சின்னத்திலும், பாண்டிச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் ரங்கசாமி தனி சின்னத்திலும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதி கட்சி மட்டும் இரட்டை இலையில் போட்டியிடுகிறது. 

இறுதியாக அதிமுக- 21 இடங்களில் இரட்டை இலை சின்னத்திலும், திமுக அணியில் 24 இடங்களில் உதய சூரியன் சின்னத்திலும் மோத உள்ளது.